கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36 ஆக குறைந்தது
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36 ஆக குறைந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் தொற்று பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 5-க்கும் கீழேயும் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 871 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36 ஆக குறைந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது.