மாவட்டத்தில் பதிவான மழை அளவு
மாவட்டத்தில் பதிவான மழை அளவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வரு மாறு:- ராமநாதபுரம்-23, மண்டபம்-113.2, ராமேசுவரம்-38.4, தங்கச்சிமடம் -88.7, பாம்பன்-114.2, பள்ளமோர்குளம் -23, திருவாடானை -23, தொண்டி -48.5, தீர்த்தாண்டதானம்-32.7, வட்டாணம்-31.9, ஆர்.எஸ்.மங்கலம் -28.2, பரமக்குடி -12.2, முதுகுளத்தூர் -11, கமுதி -5.8, கடலாடி -6. சராசரி -37.46. மாவட்டத்தில் அதிக அளவாக மண்டபத்தில் 113 மி்.மீ., பாம்பனில் 114 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்துள்ளனர்.