மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் கோதண்டராமன்(18). திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த இவர் நேற்று பிற்பகல் மேல்புதுப்பட்டு அருகில் உள்ள தரைப்பாலத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வெள்ளத்தால் கோதண்டராமன் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
பின்னர் இது பற்றிய தகவல் அறிந்து வந்த மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாசில்தார் கோவர்த்தனன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.