பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-11-28 16:32 GMT
கோவை

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ வில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

பாலியல் தொந்தரவு

கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவருடைய தம்பி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் குனிய முத்தூர், வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஆசிக் (வயது 23) என்பவர் 2 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து அவர் 2 பேரையும் செல்வபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். 

வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஆசிக் 2 மாணவர்களையும் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "தற்போது பாலியல் தொந்தரவு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இதுதொடர் பாக புகார் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குற்ற வாளிகள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்