அத்திமரப்பட்டி பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன

அத்திமரப்பட்டி பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன

Update: 2021-11-28 15:56 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். இந்த வருடம் போதுமான தண்ணீர் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாய பணிகளில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக நன்றாக வளர்ந்து வந்த வாழை மற்றும் நெல் வயல்களில் மழை தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு விவசாயிகள் பல வகைகளில் முயற்சி செய்தும் தொடர் மழையின் காரணமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.  நெற்பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழைகளால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு வாழை வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்