சாமல்பட்டி அருகே பிளஸ்2 மாணவன் தற்கொலை

சாமல்பட்டி அருகே பிளஸ்2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-27 22:37 GMT
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே சென்னானூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கவியரசு (வயது 17). இவன் குன்னத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். கடந்த 2 மாதங்களாக இவன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கவியரசு விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தான். அவனை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் கவியரசு பரிதாபமாக இறந்தான். இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்