சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிடக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மகாராஜன், சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.