பயிலரங்கம்
விருதுநகர் மாவட்ட போலீஸ் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட போலீஸ் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கணேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் கலாராணி, இளைஞர் நீதி பொறுப்பு நீதிபதி மருது பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போக்சோ மாவட்ட நீதிபதி தனசேகரன் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாப்பது குறித்த சட்ட விதிமுறைகள் பற்றி பேசினார். முடிவில் மாவட்ட நன்னடத்தை அதிகாரி முருகேசன் நன்றி கூறினார். இப்பயிலரங்கில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.