இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

Update: 2021-11-27 19:31 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், மொட்டமலை, கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 1,002 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக, விருதுநகர் மாவட்டத்தில்  மல்லாங்கிணறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 110 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் தாசில்தார் கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்