மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ேமலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. மதுரை மலையாளத்தான்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.