கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2021-11-27 18:03 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. 

தொற்றின் பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாவட்டம் முழுவதும் தினமும் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

இன்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 17 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த காட்பாடியை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் இன்று பலனின்றி உயிரிழந்தனர். 

தொற்றினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்