கொரோனா தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 197 நாட்டு தேசிய கொடிகளுடன் ராணுவவீரர் நடைபயணம்

கொரோனா தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 197 நாட்டு தேசிய கொடிகளுடன் ராணுவவீரர் நடைபயணம்

Update: 2021-11-27 17:41 GMT
அரசூர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் பாலமுருகன்(வயது 33.) ராணுவவீரரான இவர் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் நலம் பெற வேண்டியும், கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்த அனைத்து நாட்டு தலைவர்கள், மருத்துவர், செவிலியர் மற்றும் அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி தள்ளு வண்டியில் 197 நாடுகளின் தேசிய கொடியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 
கடந்த 16-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசூர் வந்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர். அதேபோல் மேடத்தூர், மடப்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய முக்கிய இடங்களில் பாமுருகனை பொதுமக்கள் வரவேற்றனர். தொடர்ந்து 2 மாதங்களாக 2 ஆயிரத்து 800 கிலோ மீ்ட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ள இவர் உத்தரப்பிரதேச  மாநிலம் சரயு ஆற்றில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

மேலும் செய்திகள்