தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது

தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-27 17:41 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்தாஸ் (வயது 45). தொழிலதிபர். சம்பவத்தன்று இவர் இறையூர் கிராமத்தில் இருந்து வடகுரும்பூர் கிராம சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறி்த்த மர்மநபர்கள் பன்னீர்தாசை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி (20) சின்னப்பன்  (24), தாமஸ் (20), மரிய அந்தோணி (21), டான்பாஸ்கோ (21) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து  பன்னீர்தாசிடம் இருந்து பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்