ஆற்றில் இறங்கி பிணத்தை மீட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

ஆற்றில் இறங்கி பிணத்தை மீட்ட சப் இன்ஸ்பெக்டரை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Update: 2021-11-27 17:13 GMT
திருப்பத்தூர்

ஆற்றில் இறங்கி பிணத்தை மீட்ட சப் இன்ஸ்பெக்டரை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நரியம்பட்டு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் அடித்து வரப்பட்ட அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. அதனை மீட்க பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை.

 இதனாஸ் உமராபாத் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் காதர்கான் ஆற்றில் இறங்கி பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் வெகுமதி வழங்கி பாராட்டினார். 

மேலும் செய்திகள்