பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-11-27 16:04 GMT
கம்பம்:

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி கம்பம் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சுவாமிக்கு தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 

பின்னர் காலபைரவர் சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மற்றும் வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்