திருவாரூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது

திருவாரூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2021-11-27 14:31 GMT
திருவாரூர்:-

திருவாரூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

3-வது முறையாக கர்ப்பம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தெற்கு பிடாகை மேலமருதூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 3-வது முறையாக கர்ப்பமுற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பிரசவத்துக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். 
ஆம்புலன்ஸ் திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகில் வந்த போது மாரியம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. 

அழகான பெண் குழந்தை

ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிவேல், மாரியம்மாளுக்கு பிரசவம் பார்த்தார். இதில் மாரியம்மாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பிரசவ வலியால் பெண் துடித்த நிலையில் சிறப்பாக ெசயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மணிவேல், டிரைவர் அரங்கராஜ் ஆகியோரை மாரியம்மாளின் உறவினர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்