கலெக்டர் திடீர் ஆய்வு
தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி ரத்தினம் நகரில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் செயல்பாடுகள், அங்கு முருங்கை இலையை பதப்படுத்தி பொடியாக்கி, மாத்திரை வடிவில் தயாரிக்கும் பணி, முருங்கை விதை எண்ணெய், முருங்கை இலையில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பிறகு அவர் கூறுகையில், தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முருங்கை இலை, முருங்கை விதை ஆகியவற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து முருங்கை இலை,
விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு இவை தயாரிக்கப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் இதுபோன்ற செயல்முறைகள் மேலும் செயல்படுத்தப்படும் என்றார்.
ஆய்வின் போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆறுமுகம், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பால்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஷ்ணுராம் மேத்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.