வருவாய் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சிங்கப்பெருமாள் கோவில் வருவாய் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-27 08:41 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ரெயில் நிலைய சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலை அலுவலக வளாகத்தின் எதிரே நின்றுக்கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதனையடுத்து பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

வருவாய் அலுவலகத்தின் எதிரே சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் உள்ளது. அங்கு ஏராளமான முட்புதர்கள் இருப்பதால் அங்குள்ள பாம்புகள், பூச்சிகள் மழை காலங்களில் அந்த பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் புகுந்து விடுகின்றன.

இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று வருவாய் அலுவலக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்