திருவள்ளூரில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

திருவள்ளூரில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-11-27 07:50 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருத்தணி இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 62). இவர் திருவள்ளூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு திருவள்ளூர் தேரடி அருகே உள்ள கடை முன்பு படுத்து கொண்டிருந்தார். அப்போது அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்