அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்: போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
ஈரோடு
அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
பெருந்துறை போலீசார்
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி (அதாவது நேற்று) அமல் படுத்தப்பட்டது. இதையொட்டி அரசியல் அமைப்பு சட்டத்தை அமல் படுத்துவதில் முன்னிலை வகிக்கும் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். பெருந்துறை போலீஸ் நிலையத்தில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை வாசிக்க போலீசார் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இதேபோல் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்திலும் நடந்தது.
கோபி
கோபி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்திய அரசு அமைப்பு சட்டத்தின் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையொட்டி கோபி நகராட்சி அலுவலகம், கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோபி தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூகலூர், காசிபாளையம், கொளப்பலூர் பேரூராட்சிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.