துறையூர்- பச்சமலை சாலையில் 6 இடங்களில் மண்சரிவு
துறையூர்- பச்சமலை சாலையில் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூர், நவ.27-
துறையூர்- பச்சமலை சாலையில் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பச்சமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிக மழை பெய்ததால் துறையூரில் இருந்து பச்சமலை செல்லும் சாலையில் 6 இடங்களில் பலத்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் துறையூரில் இருந்து பச்சமலை செல்லும் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சாலைகளில் சரிந்து கிடந்த மண் குவியல், கற்கள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றிய பின்பு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் சென்றபோது எப்போது மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. வனத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைத்து புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பச்சமலை மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை சீரமைக்க...
ேமலும் உப்பிலியபுரத்தில் இருந்து சோபனபுரம் வழியாக டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் வனத்துறையினருக்கு சொந்தமான பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டல வன பாதுகாவலர் சதீஸ், மாவட்ட வன அலுவலர் கிரண் ஆகியோர் உத்தரவின்பேரில் துறையூர் கோட்ட வனச்சரகர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
சோபனபுரத்தில் இருந்து டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் 14 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ள நிலையில், பலமுறை புகார் அளித்தும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பச்சைமலை மலை வாழ்மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது பற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது, மேற்படி சாலை பணிகளுக்காக அரசின் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், கிடைத்த பின் சோபனபுரம்- டாப்செங்காட்டுப்பட்டி இடையேயான பாலங்கள் செப்பனிடப்பட்டு, மண்சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர்களுடன் சாலை பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும், என்றும் தெரிவித்தனர்.