மணல் கடத்திய லாரி டிரைவர் கைது
மணல் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்
அன்னவாசல்
இலுப்பூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சுரங்கத்துறை அதிகாரி விஜயகுமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த சுரங்கத்துறை அதிகாரி மேல் நடவடிக்கைக்காக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் இலுப்பூர் கோட்டைத் தெருவை சேர்ந்த பத்மநாதன் (வயது 44) என்பவரை கைது செய்தார்.