சாலை விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம்
சாலை விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்
காரையூர்
இலுப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகுரும்பட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் பாலமுருகன் (வயது 28). இவர் மேலத்தானியம்-ஒலியமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்ற போது இவரது வாகனமும், பொன்னமராவதி தாலுகா கீழத்தானியத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் சதீஷ்குமார் (30) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மூக்கன் மகன் ராஜேந்திரன் (30) ஆகிய இருவரும் வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேந்திரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சதீஷ்குமார் மணப்பாறை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.