நிதி நிறுவன ஊழியரின் ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ 2 லட்சம் திருட்டு

நிதி நிறுவன ஊழியரின் ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த ரூ 2 லட்சம் திருட்டு

Update: 2021-11-26 17:26 GMT

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 43). இவர் காணையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக அதை ஒரு பையில் வைத்து அதனை தனது ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். 

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள டீக்கடை எதிரே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரில் இருந்த பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள், அந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்