மழை வெள்ளத்தால் திசையன்விளை- நவ்வலடி போக்குவரத்து துண்டிப்பு
மழை வெள்ளத்தால் திசையன்விளை- நவ்வலடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திசையன்விளை;
திசையன்விளை தாலுகா பகுதியில் நேற்று பெய்த கனமழையால் நம்பியாற்று அணை நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தரைபாலத்தில் தண்ணீர் அதிகமாக சென்றது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. முதுமொத்தன் மொழி செல்லும் மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.