போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

வேடசந்தூர் அருகே போலீஸ் சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2021-11-24 15:28 GMT
வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் துறை சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமை தாங்கி பேசினார். இதில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பற்றியும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் பெண் போலீசார் விளக்கி கூறினர். மேலும் மாணவர்கள் சீருடை அணிந்து, தலைமுடியை சீராக வெட்டி வரவேண்டும். மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்