விழா பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

விழா பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

Update: 2021-11-23 19:50 GMT
சேலம், நவ.24-
சேலத்திற்கு வருகிற 29-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவர் கலந்து கொள்ளும் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு நடத்தினார்.
அரசு நலத்திட்ட உதவிகள்
வருகிற 29-ந்் தேதி (திங்கட்கிழமை) சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஏராளமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இந்த விழாவுக்காக சீலநாயக்கன்பட்டி பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று சேலத்திற்கு வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு நேரில் சென்று பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து பந்தல் அமைப்பதற்கான வரைபடத்தை ஆய்வு நடத்தி அதிகாரிகளிடம் விவரம் கேட்டு அறிந்தார்.
ஆலோசனை நடத்தினார்
பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்