கஞ்சா விற்ற கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சாவை கடத்தி வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோகர்ணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெவ்வேறு இடங்களில் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 27) மற்றும் டி.வி.எஸ் கார்னரை சேர்ந்த வித்யா(28), அவரது கணவர் சண்முகம் (30) ஆகியோரை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர்.