நூதன முறையில் உடற்கல்வி ஆசிரியர் விழிப்புணர்வு

ஒரு கையால் பெடலை பிடித்து சைக்கிள் ஓட்டி நூதன முறையில் உடற்கல்வி ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-11-23 17:46 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பழைய மண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குணசீலன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தியும், மதநல்லிணக்கம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கையில் பெடலை பிடித்து சைக்கிள் ஓட்டினார். 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலகத்தின் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து குணசீலன் அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் வரை சைக்கிளின் கைப்பிடியைப் ஒரு கையால் பிடித்த படியும், பெடலை ஒரு கையால் சுற்றியபடியும் சைக்கிளை ஓட்டி சென்றார். 

நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் கல்பனா வரவேற்றார்.

இதில் தாசில்தார் சுரேஷ், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், மோகன், பழைய மண்ணை பள்ளி தலைமைஆசிரியர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்