யூரியா உரம் தட்டுப்பாடு

யூரியா உரம் தட்டுப்பாடு

Update: 2021-11-23 15:55 GMT
குண்டடம்
தாராபுரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குறைதீர்க்கும் கூட்டம் 
தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமை தாங்கினார்.  இதில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு
காளிமுத்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்
தாராபுரம் பகுதியில் நெல், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு  தற்போது அடி உரம் யூரியா போட வேண்டிய தருணம். ஆனால் கடைகளில் யூரியா கிடைப்பதில்லை.இருப்பு வைத்துள்ள யூரியாவை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். மற்ற இடுபொருட்களை வாங்கினால்தான் யூரியா தரப்படும் என வற்புறுத்துகின்றனர். இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஈஸ்வரமூர்த்தி உழவர் உழைப்பாளர் கட்சி
பழைய அமராவதி பாசன பகுதிகளில் நடவு மேற்கொள்ளப்பட்டு நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மண் வாய்க்கால்களில் தூர்வாரதாத காரணத்தால் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. வருவாய்த்துறையினர்  கிராம ஆவணங்களில் முறையாக பதிவு செய்யாததால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஜெயக்குமார் விவசாயிதொப்பம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 
மின்மாற்றி பழுது
பழனிச்சாமி தமிழக விவசாயிகள் சங்கம்
மின்சார வாரியம் சார்பில் செலாம்பாளையம் பகுதியில் மின் மாற்றி. வைக்கப்பட்டுள்ளது.அது பழுதடைந்தால் சரி செய்வதில்லை.பழனி தாலுகா வரை மின் கம்பி செல்வதால் பழனியில் இருந்து ஆட்கள் வந்து சரி செய்யப்படும் என்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. மின் தட்டுப்பாடு காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. அலங்கியம் பகுதியில் குரங்குகள் தொந்தரவால் தென்னை விவசாயம் பாதிக்கப்படுகிறது. வனத்துறையினர் கொண்டு குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
முருகானந்தம் உப்பாறு பாசன விவசாயி
உப்பாறு அணை ஓரளவு நிரம்பியுள்ளது. பாசன வாய்க்கால்கள் பழுது ஏற்பட்டுள்ளதால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியவில்லை. எனவே பாசன வாய்க்கால்களை பராமரித்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்து  உதவி வேளாண்மை இயக்குனர் லீலாவதி பேசியதாவது
தாராபுரம் பகுதியில் 25 டன் யூரியா உரம் 5 வர்த்தக நிறுவனங்களில் இருப்பு உள்ளது. மேலும் 250 மெட்ரிக் டன் யூரியா வரவழைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் சப்ளை வந்துவிடும். உரம் அதிக விலைக்கு வ ஆர்.டி.ஒ.குமரேசன்
 கோட்டளவில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்றவேண்டும். மனுக்களின்பேரில் நடவடிக்கைகள் துறை வாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும்  தகவல் கூறுங்கள். விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்