கடம்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது

கடம்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2021-11-23 15:39 GMT
கயத்தாறு:
கடம்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
கடையடைப்பு 
கடம்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, கடம்பூர் நகர வியாபாரிகள் சங்க தலைவர் தனசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் வாசமுத்து பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகபாண்டியன், காங்கிரஸ் நகர தலைவர் எம்.கே.ஜெகதீசன், வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.காமராஜ், அ.ம.மு.க. நகர செயலாளர் கனகவேல், ம.தி.மு.க. நகர செயலாளர் ரெங்கசாமி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலகுமார் மற்றும் கடம்பூர், ஓட்டுடன்பட்டி, தங்கம்மாள்புரம், தெற்குவண்டானம், குப்பனாபுரம், கோடாங்கால் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரெயில் மறியல்
அப்போது அவர்கள், எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி அனைத்து கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்