பழவேற்காடு பகுதியில் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
பழவேற்காடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு
ஆந்திர மாநிலம் வடபெண்ணை பகுதியில் தொடர்மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடு ஏரி பகுதியில் உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் எடமணி, ரகமத்நகர், பசியாவரம், எடமணி குப்பம், சோமஞ்சேரி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களான மணலி புதுநகர், விச்சூர், வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், பள்ளிபுரம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நிவாரண உதவுகள்
சோழவரம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். பழவேற்காடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களின் சார்பில் படகில் சென்று உணவுகளை வழங்கினார்.
சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் அடங்கிய ராஜேஸ்வரி நகரில் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றை வழங்கினார்.