குளத்தூர் அருகே காரில் கடத்தப்பட்ட 35 மூட்டை ரேஷன் அரிசி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது

குளத்தூர் அருகே காரில் கடத்தப்பட்ட 35 மூட்டை ரேஷன் அரிசி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-11-23 14:25 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே காரில் கடத்திய 35 மூட்டை ரேஷன் அரிசி பிடிபட்டது.
சோதனை
 விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வைப்பார் - சூரங்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரை ஓட்டிவந்தவர் தப்பி ஓடிவிட்டார். 
பறிமுதல்
அந்த காரில் 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தனிப்படையினர் 35 ரேஷன் அரிசி மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்து, குளத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
 இது தொடர்பாக குளத்ததூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்