வீணாகும் குடிநீர்
மழை காலங்களில் மழை நீரை சேமிக்க முன்யோசனை இல்லாமல் கடலில் கலக்க விடுகிறோம். கோடை காலத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு ரோடுரோடாய் அலைகிறோம். மறுபக்கம் அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன் பயிர்கள் காய்ந்து போவதை பார்க்கிறோம். இது ஒரு புறம் இருக்க பொதுமக்களுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்யும் குடிநீரும் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே பழக்கம் வழக்கம் முதல் பயன்படுத்தும் பொருள்வரை அனைத்தும் வளர்ந்த நாடு போல் இருக்க வேண்டும் என நினைக்கும் நாம், குடிநீரை மட்டும் கண்ட கண்டஇடங்களில் உடைய விட்டு பார்த்து கைகட்டி பார்க்கிறோம். எனவே குடிநீர் குழாய் உடையாமல் பார்த்துக்கொள்ளது அதிகாரிகளின் கடமை. சில நேரங்களில் குழாய் உடைந்து விடுவது தவிர்க்க முடியாதது. அப்போது தரமான குழாய்களை பதித்து குடிநீரை பாதுகாக்க வேண்டும். காங்கயம்- திருப்பூர் ரோடு தண்ணீர் தொட்டி வீதியில் ஒரு மாத காலத்துக்கு மேலாக தண்ணீர் வீணாக வெளியேறுகின்றது. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. பொதுமக்களும் குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டாமலும், வீடுகளுக்கு குப்பை வாங்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்காமல் சாலையில் கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களும் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும் குப்பை தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பூர் மாநகராட்சி 28வது வார்டு ஜே.பி. நகர், ராதாநகர் மெயின் ரோடுபகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.