திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது

Update: 2021-11-23 10:31 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக் குழுவின் சார்பில் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் மேலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி உயர்கல்வித்துறையில் நவீன வளர்ச்சிகள் என்ற தலைப்பில் இணையவழி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வரவேற்று பேசியதுடன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு கிறிஸ்து ஜெயந்தி கல்லூரியின் இயக்குனர் பி.பாபா ஞானகுமார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஒவ்வொரு கல்லூரியும் தேசிய மதிப்பீட்டுக்குழு கழகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, எப்படி மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். கல்லூரி செயலாளர்  ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் முதல்வர்கள், அகதர மதிப்பீட்டு குழு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆதித்தனார் கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்