சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம்; வாலிபர் போக்சோவில் கைது
சித்தோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பவானி
சித்தோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியை சேர்ந்தவர் ராமர். அவருடைய மகன் தர்மலிங்கம் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.
போக்சோவில் வாலிபர் கைது
இதைத்தொடர்ந்து தர்மலிங்கம் சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் இதுபற்றி பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக தர்மலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.