சேமிப்பு கிடங்கில் மழைநீர் புகுந்தது
திருவிடைமருதூரில் பெய்த தொடர் மழையால் சேமிப்பு கிடங்கில் மழைநீர் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
திருவிடைமருதூர்,
திருவிடைமருதூரில் பெய்த தொடர் மழையால் சேமிப்பு கிடங்கில் மழைநீர் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
சேமிப்பு கிடங்கு
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.
திருவிைடமருதூரில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
மழைநீரை வெளியேற்றும் பணி
சேமிப்புக் கிடங்கு மற்றும் அதை சுற்றி மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமைடைந்துள்ளது. எனவே மழை நீரை வெளியேற்றும் பணியில் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.