வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-11-22 19:16 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனா (வயது 40). இவர் நேற்று காலையில் மார்க்கெட்டுக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சாந்திநகர் மெயின் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சனா பரிதாபமாக பலியானார். 
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியை சேர்ந்தவர் இசக்கி ராஜா மகன் விக்னேஷ்குமார் (25). இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்