வீடுகட்ட தோண்டியபோது கிடைத்த பாசி குவியல்

வீடுகட்ட தோண்டியபோது பாசி குவியல் கிடைத்தது.

Update: 2021-11-22 17:40 GMT
தொண்டி, 
தொண்டி அக்ரஹாரம் தெருவில் வசித்து வருபவர் சக்கர வர்த்தி இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. அப்போது ½ கிலோ எடை கொண்ட வெள்ளை நிற பாசி போன்ற பொருள் மண் கலந்த நிலையில் கிடைத்ததாக கிராம உதவியாளர் மகாலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது . இது தொடர்பாக அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தொண்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) முத்து லெட்சுமி அந்த பொருளை கைப்பற்றி தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கைப்பற்றப்பட்ட பொருள் குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தாசில்தார் செந்தில்வேல் முருகன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்