மழைநீரில் புத்தகங்கள் நனைந்து சேதம்

கொரடாச்சேரி பேரூராட்சி நூலக கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் மழைநீரில் புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டு்ம் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-22 16:29 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி பேரூராட்சி நூலக கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் மழைநீரில் புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன.  எனவே புதிய கட்டிடம் கட்டித்தர  வேண்டு்ம் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நூலக கட்டிடம் 
தி்ருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசின் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் மேற்கூைரயில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொடர் மழையால்  கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் வழியாக தண்ணீர் உள்ளே வந்துள்ளது. 
புத்தகங்கள் நனைந்தன 
இதனால் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான புத்தகங்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. மேலும் புத்தகங்கள் நனையாமல் இருப்பதற்காக பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நூலகத்திற்கு புத்தகம் படிக்க வரும் வாசகர்கள் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். மழைநீர் உள்ளே வருவதால் புத்தகங்களை படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகி்ன்றனர். 
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கொரடாச்சேரி பேரூராட்சி நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் மழையில் நனைந்த புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் வாங்கி தர வேண்டும் என்று அப்பகுதி வாசகர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்