தினத்தந்தி செய்தி எதிரொலியாக, குரும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக, குரும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

Update: 2021-11-22 15:57 GMT
தென்திருப்பேரை:
ஸ்ரீவைகுண்டம் அருகே பொன்னன்குறிச்சியில் இருந்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு குழாய் மூலம் தாமிரபரணி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திருச்செந்தூர்-நெல்லை சாலை ஓரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குரும்பூரில் மெயின் ரோடு ஓரத்தில் இந்த குடிநீர் குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டிருந்தது. இந்த உடைப்பில் இருந்து குடிநீர் சாலைஓரத்தில் வீணாகி வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு சென்றும் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக புகார் எழுந்தது. உயர் அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி, உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி `தினத்தந்தி'யில் நேற்று வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். செய்தி வெளியிடப்பட்டு சில மணி நேரத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதால் `தினத்தந்தி'க்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்