கூடலூர்
கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக்கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.