செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

வடகிழக்கு பருவமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவிலிமேடு பாலாற்றில் செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-11-22 12:58 GMT
வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கு பெய்து வந்தது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 340 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. பெரும்பாலான குளங்ளும் நிரம்பியுள்ளது.

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்பி எடுத்து கொண்ட பொதுமக்கள்

1903-ம் ஆண்டுக்கு பிறகு காஞ்சீபுரம் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்க்க 3-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்த்து மிகிழ்ந்தனர்.

பெருக்கெடுத்து ஓடும் பாலாற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்