101 அடி உயர மலையில் ஏறி 5 வயது சிறுமி சாதனை
101 அடி உயரமுள்ள மலை உச்சியை கயிறு மூலம் 2 நிமிடம் 15 நொடிகளில் ஏறி சாதனை படைத்தார் சாந்தினி லட்சுமி.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அருணா லட்சுமி. இவருடைய மகள் சாந்தினி லட்சுமி (வயது 5). பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி சாந்தினி லட்சுமி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள 155 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து கயிறு மூலம் 2 நிமிடத்தில் கீழே இறங்கினார்.
பின்னர் அருகே இருந்த 101 அடி உயரமுள்ள மலை உச்சியை கயிறு மூலம் 2 நிமிடம் 15 நொடிகளில் ஏறி சாதனை படைத்தார். சாதனை படைத்த சிறுமிக்கு, மலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோ.பத்மநாபன் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.