அரக்கோணம் அருகே ரெயில் மோதி 2 தொழிலாளர்கள் பலி
அரக்கோணம் அருகே ரெயில்மோதி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே ரெயில்மோதி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
2 பேர் பலி
செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையில் சேந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு பேர் அடிபட்டு கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபாமக இறந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரெயில் மோதி இறந்தவர்கள் தக்கோலத்தை சேர்ந்த சுகுமார் (வயது 26), பாலா என்கிற பார்த்தசாரதி (30) என்பதும், இருவரும் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், விபத்து நடந்த பகுதி செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.