பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-11-21 17:47 GMT
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பழனி விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்