தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

உத்தமபாளையம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-21 16:53 GMT
உத்தமபாளையம்: 

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி கோனார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஷருபதி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ஷருபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்