கொடைக்கானல் அருகே தெரு நாய்கள் கடித்து கேளையாடு பலி
கொடைக்கானல் அருகே தெரு நாய்கள் கடித்து கேளையாடு பலியானது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை, நகரை ஒட்டியுள்ள பகுதிக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா இடமான பில்லர்ராக்ஸ் பகுதியில் ஒரு கேளையாடு இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனச்சரகர் சிவகுமார், வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கேளையாட்டின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் தெருநாய்கள் துரத்தி கடித்ததன் காரணமாக கேளையாடு, உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர், சம்பவ இடத்திலேயே கேளையாட்டுக்கு உடல் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.