கோவில்பட்டியில் எரியும் நெருப்பில் ஸ்கேட்டிங் மூலம் தடை தாண்டி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது

கோவில்பட்டியில் எரியும் நெருப்பில் ஸ்கேட்டிங் மூலம் தடை தாண்டி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது

Update: 2021-11-21 16:01 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள தனியார் மஹாலில் எரியும் நெருப்பில் தடை தாண்டும் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி  நடைபெற்றது. சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் சார்பில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் 2-ம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஏ.அஜித்குமார், தருண் வெங்கடேஷ், டெல்பெர்ட் கிப்ட்சன், ஆர்.லக்சன், பி. மோனிஸ் வாசன், கே, முகுந்தன், எஸ்.சஞ்சய் கவுதம், எம்.சாமந்த் ராஜ், கே.சுதாகரன், வி.டி.எம்.யோஜித் ஆகிய 10 பேர் பங்கேற்றனர்,
யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான இந்த நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக விநாயகா ரமேஷ் கலந்து கொண்டார்.
உலக சாதனையாக 10 மாணவர்கள் 2,500 தடவை ஸ்கேட்டிங் மூலம், எரியும் நெருப்பு தடைகளை தாண்டும் சாதனை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இதற்காக 10 அடி இடைவெளியில் 4 நெருப்பு தடைகள் வைக்கப் பட்டிருந்தன. 10 மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக ஸ்கேட்டிங் மூலம் தடைகளை தாண்டினர். அப்போது பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்தினார்கள்.
அவர்கள் திட்டமிட்டிருந்த 2,500 தடவை என்ற இலக்கை முறியடித்து 2,940 தடவை நெருப்பு தடைகளை தாண்டி உலக சாதனை படைத்தனர். இந்த தடைகளை அவர்கள் 1 மணி 16 நிமிடம் 20 வினாடிகளில் தாண்டினார்கள். இந்த சாதனை யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.
சாதனை மாணவர்கள் 10 பேருக்கும் பதக்கம் அணிவித்து கேடயம் பரிசு அளிக்கபட்டது. டாக்டர் கோமதி பரிசுகள் வழங்கினார். பயிற்சி நிறுவனத்தை சர்ந்த ரூபா, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்