ஆசீர்வாதம் செய்வதாக கூறி ரூ.7 ஆயிரம் வழிப்பறி: 2 திருநங்கைகள் கைது
ஆசீர்வாதம் செய்வதாக கூறி ரூ.7 ஆயிரம் வழிப்பறி செய்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் காருண்யா (வயது 35). இவர் தனது தோழியான அனிதா என்பவருடன் புரசைவாக்கத்தில் பொருட்கள் வாங்கிவிட்டு வேப்பேரி ரித்தர்டன் சாலை வழியாக மொபட் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் அவர்களை நிறுத்தி ஆசீர்வதித்தனர். பின்னர் அவர்களிடம் பணம் கேட்டனர். காருண்யாவும், அனிதாவும் பர்சை எடுத்து பணம் கொடுக்க முற்போது, 3 பேரும் பர்சை பிடுங்கி ரூ.7 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவம் கடந்த 16-ந்தேதி நடந்தது. இதுகுறித்து வேப்பேரி போலீஸ்நிலையத்தில் காருண்யா புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் திருநங்கைகளான பெரியமேடு பகுதியை சேர்ந்த சுமித்ரா (23), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவன்யா (19) மற்றும் சிவகாமி என்ற பெண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.